Friday, 31 July 2015

ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி என்றால் என்ன? - அவைகள் இருக்கும் ஊர் விவரங்கள் - ஜீவ சமாதி வழிபாடு

ஜீவ சமாதிகள் - அவைகள் இருக்கும் ஊர் விவரங்கள்
ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி என்றால் என்ன?
ஜீவசமாதி சென்னை - சித்தர்கள் ஜீவசமாதி திருமூலரின் ஜீவசமாதி
சமாதி / ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி என்றால் என்ன? ஜீவ
சித்தத்தை அடக்கி சமாதி நிலையிலிருந்து சகலத்தையும் அறிந்தவர்கள்;சகலருக்கும் உதவுபவர்களை சித்தர்கள் என்று சொல்வதுண்டு.
/ ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி என்றால் என்ன? ஜீவ சமாதி
சுப்பன் ஞானியார் - சற்குரு ஸ்ரீ சுப்பா ஞானியார் சுவாமிகள் - அருப்புக்கோட்டை - ஜீவ சமாதி
இவர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு அருப்புக்கோட்டையில் பிறந்திருக்கிறார். எண்ணெய் வியாபாரம் செய்யும் குடும்பத்தில் பிறந்திருந்தார். இறை அருள் பெற்று ஞானியானார். இதனால் இவருடைய செல்வங்களையெல்லாம் துறந்தார். இவரது ஜீவ சமாதி சொக்கநாத சுவாமி என மக்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
சமாதிகள் / ஜீவ சமாதி என்றால் என்ன? ஜீவ சமாதி / ஜீவ
கும்பகோணம் சுவாமிகள்/கோவிந்த ஆனந்த சுவாமிகள்-ஜீவ சமாதி - அருப்புக்கோட்டை
அருப்புக் கோட்டை பழைய பஸ்ஸ்டான்டிலிருந்து மலையரசன் கோவில் என்று  சொல்லப்படும் பெருமாள் கோவில் போகக்கூடிய வழியில் இந்த சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இவரை கும்பகோணம் சுவாமிகள் என்றும் சொல்வதுண்டு. வெட்ட வெளியிலே, சாலையின் ஓரத்தில் , தின பூஜைகள் ஏதும் இல்லாமல் இந்த சமாதி இருக்கின்றது. இது சமாதியா அல்லது ஜீவ சமாதியா என்பது தெரியவில்லை.
ஜீவ சமாதி என்றால் என்ன? ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள்
ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்  ஜீவ சமாதி - அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை என்னும் நகரின் மையத்தில் இருக்கின்றது ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில். இதற்கு அருகே இருக்கின்ற தெப்பக்குளத்தின் கரையிலே ஸ்ரீ சாது லாலா ஆத்மானந்த சுவாமிகள்  ஜீவ சமாதி உள்ளது.
என்றால் என்ன? ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி
அழகர்சாமி சித்தர் - கடப்பாரை சாமி - மெட்டுகுண்டு - பாலவ நத்தம்
விருதுநகர் இல்லிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் பாலவநத்தம் என்னும் ஊருக்கு போக வேண்டும். அங்கிருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவில்லுக்கு செல்வும் வழியில் 4கிமீ தூரத்தில் இந்த சமாதி ஆலயம் இருக்கின்றது.
என்ன? ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள் / ஜீவ சமாதி என்றால்
ஸ்ரீ வீரபத்திர சுவாமிகள் - வாழ்வாங்கி - செட்டிகுறிச்சி விலக்கு
இது 200  ஆண்டுகள் பழமையானது.விருதுநகர் மாவட்டம்ல் இருக்கும் பந்தல்குடியில் இருந்து மதுரை போகும் நான்கு வழி மெயின் ரோட்டில் இருக்கக்கூடிய வாழ்வாங்கி என்று ஊருக்கு அடுத்த ஸ்டாப்பில் செட்டிகுறிச்சி விலக்கு இருக்கிறது. இங்கு சாலையின் மேற்கே மகானின் சமாதி ஆலயம் இருக்கிறது.
ஜீவசமாதி / ஜீவசமாதிகள் / ஜீவசமாதி என்றால் என்ன?
தட்சிணாமூர்த்தி சுவாமி
அருப்புக்கோட்டையில் இருக்கும் சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே இந்த சமாதி கோவில் இருக்கிறது.

பொன்னம்பல சுவாமி
அருப்புக்கோட்டையில் இருக்கும்  பாவடித்தோப்பு அருகே உள்ள ஆயிரம் கண் மாரியம்மன் கோவில்லுக்கு மேற்கே இந்தச்சமாதி கோவில் இருக்கிறது.

நாக்குட்டி சாமியார் - ஸ்ரீ மாரியப்ப சுவாமிகள் - விருதுநார்
இன்றிலிருந்து 15வது நாள் இறைவனிடம் போகிறேன் என்று அறிவித்து
அதன்படியே சமாதியானார்கள். விருதுநகருக்கு தெற்கே கௌசிகா மகா நதியின் வடகரையில் இந்த சமாதி உள்ளது

புலியூரான் சமாதி கோயில்-புலியூரான் சித்தர்-அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் இருக்கிறது புலியூரான் சமாதி கோயில்.

கட்டங்குடி- ரெட்டிச்சாமி - குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையில் இருந்து 15 கி.மீ/தூரத்தில் இருக்கும் கட்டங்குடியில் இந்த சமாதி இருக்கிறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

சிவானந்த ஜோதி-அருப்புக்கோட்டை - சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்
மேற்கிலிருந்து அருப்புக்கோட்டைக்குள் நுழையும்போது சாலைக்கு வடக்குப்புறம் முதலில் தெரியும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில் ஆகும்.

வடக்கு நத்தம்- ஆறுமுகச்சாமி
அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் இருக்கும் வடக்கு நத்தம் என்ற கிராமத்தில் இந்த சமாதி கோவில் இருக்கிறது. சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

துத்தி நத்தம் - சிவத்தையா சுவாமி -பரளச்சி -சாயல்குடி -ஜீவசமாதி
அருப்புக்கோட்டை சாயல்குடி ரோட்டில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு இருக்கிறது  இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி ஒன்று அமைந்திருக்கிறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

கோட்டூர்-கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டைக்கு பக்கத்தில் இருக்கும்  கோட்டூரில் இந்த குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.

மாசிலானந்த சாமி ஜீவசமாதி - பெருமாள்பட்டி (கோவில்பட்டி)
அருப்புக்கோட்டை யிலிருந்து எட்டயபுரம் செல்லும் வழியில்
அருப்புக்கோட்டையிலிருந்து  18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி என்ற பஸ் ஸ்டாப் இருக்கிறது. அங்கிருந்து  1 கி.மீ.தூரத்தில் இருப்பதுதான் பெருமாள்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில்தான்  மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கினறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

ரெட்டியப்பட்டி சுவாமிகள் - ரெட்டியபட்டி - நாகலாபுரம் - அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை யில் இருந்து விளாத்திகுளம் போகும் ரோட்டில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் என்ற ஒரு ஊர் இருக்கின்றது.அங்கே இருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே போனால் ரெட்டியபட்டி என்ற ஒரு ஊர் வரும். அங்கே இந்த ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் இருக்கிறது. 

குருசாமி கோவில் - ராஜபாளையம் - ஜீவசமாதி கோவில்

ஸ்ரீபொன்னப்ப ஞானியார் சமாதி - ஸ்ரீகருப்பஞானியார் சமாதி-இராஜபாளளயம்

(பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்)
குருசாமி கோவிலுக்கு நேராகச் போகும் தெருவில் ஒரு பர்லாங் தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் இருக்கின்றன.  ஜீவ சமாதி என்றால் என்ன?

திருச்சிற்றம்பல குருநாத சுவாமி - ராஜபாளையம்
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

கொம்புச்சாமி -இராஜபாளையம்
ராஜபாளையம் இல் இருந்து சத்திரப்பட்டி போகும் வழியில் சங்கரன்கோவில் திருப்பத்தில் இருந்து ஆலங்குளம்,சத்திரப்பட்டி போகும் ரோட்டுக்குக் கிழக்கே ரோட்டுக்கு பக்கத்திலேயே அமைந்திருக்கிறது. கொம்புச்சாமி கோவில்.

குமராண்டி சுவாமி- ராஜபாளையம் (பி.எஸ்.கே.பூங்கா)  பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கே விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.

பாலத்தடி சுவாமி - ராஜபாளையம் மலையடிப்பட்டி
ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது. மேற்கு திசையில் அருள்மிகு குருசாமி முனிவரும், கிழக்கு திசையில் அருள்மிகு கருப்ப ஞானியார்,அருள்மிகு பொன்னப்ப ஞானியார் சுவாமிகளும்,  வடக்கு திசையில் அருள்மிகு சிவகாமி ஞானியார் சுவாமிகளும் தென் திசையில் அருள்மிகு கொம்புசாமி அருள்மிகு வெள்ளையங்கிரி முனிவரும் அருள் பாலித்து வருகிறார்கள்.   ஜீவ சமாதி என்றால் என்ன?


அருணாச்சலேஸ்வரர் - ராஜபாளையம் 
ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.

ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள் - ராஜபாளையம்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்பு அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம் இருக்கிறது.

சேஷம குருநாத சுவாமி - ராஜபாளையம் ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.


சென்னிகுளம் - அண்ணாமலை ரெட்டியார்
கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

ராஜபாளையம் சத்திரப்பட்டி - சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் ரோட்டில் 10 கி.மீ.தூரத்தில்  சத்திரப்பட்டி இருக்கிறது. பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இதுவாகும். அங்கு விநாயகர் ஆரம்பப் பள்ளி பக்கத்தில் ஒரு வேதாந்த மடம் இருக்கும்.இந்த மடவளாகத்திற்குள்ளாக சுப்ரமணிய சாமி ஜீவசமாதி அமைந்துள்ளது.

அயனாவரம் - ஒரு சொல் வாசகன் - ராஜபாளையம் - ஆலங்குளம்
ராஜபாளையம் ஆலங்குளம் ரோட்டில் இருக்கக்கூடிய சத்திரப்பட்டிக்கு பக்த்தில் இருக்கும் கிராமம் இதுவாகும். இங்கு இருக்கக்கூடிய கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் ஒன்று கிழக்கு பார்த்த சன்னதியாக அமைந்திருகச்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் - கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் கனரா பேங் தாண்டி மெயின் ரோட்டில் இது இருக்கிறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

அருணாச்சல செம்பட்டை ஞானி - சத்திரப்பட்டி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு இது அமைந்துள்ளது.

பொன்னாயிரம் சுவாமி - ஊரணிப்பட்டி ஊரணிப்பட்டித் தெருவில் இது இருக்கிறது.

ஆறுமுகச்சாமி கோவில் - கோவிந்தன் நகர் காலனி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி ரோட்டில் கோவிந்தன் நகர் காலனி பகுதியில் மெயின் ரோட்டின் வளைவில் இது அமைந்து இருக்கிறது. இங்கு ஆறுமுகச்சாமியும், பாம்பு தின்னி சாமியும் இருக்கின்றனர். இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை போகிறது. அந்த சுடுகாட்டிலும் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கின்றது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

சடையாண்டி சுவாமி-எஸ்.ராமச்சந்திராபுரம்
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

எஸ்.ராமச்சந்திராபுரம் - காளிமுத்து சுவாமி
மதுரை ராஜபாளையம் ரோட்டில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப்பில் எஸ்.ராமச்சந்திராபுரம் இருக்கிறது. இந்த பஸ் ஸ்டாப்புக்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவந்தார் காளிமுத்து சுவாமிகள். அவர்களின்  ஆசிரமமும், ஜீவசமாதியும் இங்கே இருக்கிறது.   ஜீவ சமாதி என்றால் என்ன?

குரு ராகவேந்திரர் சுவாமி-அதோனி ஆற்றங்கரை, மந்த்ராலயம்,ஆந்திரா - ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ. சுரைக்காய் சாமி சித்தர் - நாராயணவனம், ஆந்திரா - புத்தூரிலிருந்து 3 கிமீ - திருப்பதியிலிருந்து 35 கி.மீ. அருணாச்சல ஐயா-சிறுனமல்லி-(நெமிலி அருகே), அரக்கோணம். அமலானந்த சுவாமிகள்

 ஜீவ சமாதி / ஜீவ சமாதிகள்ஜீவ சமாதி என்றால் என்ன? - அவைகள் இருக்கும் ஊர் விவரங்கள்ஜீவ சமாதி வழிபாடு

தகவல் தொகுப்பு:- கார்த்திக் ஜோதிடம்      

6 comments:

  1. மிக அருமையான தகவல்கள். சிவாயநம, அன்பே சிவம்.

    ReplyDelete
  2. ஓம் நமசிவாய நம

    ReplyDelete
  3. ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய! ஓம் நமச்சிவாய!

    ReplyDelete
  4. சுரைக்காய் சாமியின் கோயில் புரசைவாக்கம் பகுதியில் உள்ளதாம். சரியாக எங்கே என்று சொல்ல முடியுமா?

    ReplyDelete
  5. அரிய தகவல்கள் வழங்கியதற்கு நன்றி

    ReplyDelete
  6. Casino Review & Ratings 2021 - JTM Hub
    Casino Review & Ratings 2021 - Find out how Casino Casino has become 안산 출장마사지 one of the top gaming sites in the 영천 출장안마 US. Learn 포항 출장마사지 more. 천안 출장마사지 Rating: 3.7 · ‎Review by 이천 출장마사지 JC Thomas

    ReplyDelete