Saturday, 13 June 2015

‘தட்கல்’ முன்பதிவு நேரம் மாற்றம் ‘தட்கல்’, ‘பிரிமியம்’ ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டணம் வாபஸ்


புதுடெல்லி

தட்கல் முன்பதிவு நேரம் மாற்றம் வரும் ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 10 மணி முதல் 11 மணி வரை குளிர் சாதன பெட்டிகளுக்கு முன்பதிவு செய்யப்படும் என்று ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 11 மணி முதல் 12 மணி வரை மற்ற வகுப்புகளுக்கு முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளது. முன்பதிவை ரத்து செய்தால் 50% கட்டணம் திருப்பி தருவதும் அமலுக்கு வருகிறது.

தட்கல்ரெயில் டிக்கெட்டுகளையும், ‘பிரிமியம்’ ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட் முன்பதிவு நேரத்தையும் மாற்ற உள்ளது. ‘தட்கல்’ முறையில் எடுக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தில் ஒரு பகுதி கூட திருப்பித்தரப்படுவது இல்லை. இந்நிலையில், உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட்டுகள் முன்பதிவு நேரத்தில்தான் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு முன்பதிவு முடிவடையும். இந்த புதிய முறை, ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என்றும் அஜய் சுக்லா கூறினார்.‘பிரிமியம்’ ரெயில்களின் பெயரை ‘சுவிதா’ ரெயில்கள் என்று மாற்றம் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரெயில்களிலும், டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தை வாபஸ் பெறும் முறை அமல்படுத்தப்படுகிறது.ரத்து செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, அதிகபட்சமாக 50 சதவீத கட்டணம் திருப்பித்தரப்படும்.

இதுமட்டுமின்றி, கோடை கால, பண்டிகை கால சிறப்பு ரெயில்களைப் போல நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ‘தட்கல் சிறப்பு’ ரெயில்களை இயக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகைய ரெயில்களில் வழக்கமான ரெயில்களை விட கட்டணம் அதிகமாகவே இருக்கும்.நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ஏற்கனவே ‘பிரிமியம்’ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இத்தகைய ‘தட்கல் சிறப்பு’ ரெயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இந்த ரெயில்களுக்கு பயண தேதிக்கு 60 நாட்கள் முன்பிருந்து முன்பதிவு தொடங்கும். பயண தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு நிறுத்தப்படும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமின்றி, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெறலாம்.வழக்கமான ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்கு பயணத்துக்கு முந்தைய நாள்தான் முன்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


ஏற்றுக்கொள்ளப்படும் அடையாள அட்டைகள் எவை?

வாக்காளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு போட்டோ வுடன் வழங்கிய அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வரு மானவரித்துறை வழங்கிய பான்கார்டு, பள்ளி அடையாள அட்டை, புகைப் படத்துடன் கூடிய தேசியமயமாக் கப்பட்ட வங்கியின் பாஸ்புக், புகைப் படத்துடன் கூடிய லேமினேட் செய்யப்பட்ட கிரடிட் கார்டு.

குளு குளு வசதியுடன் ஹவுரா –சென்னை தட்கல் சிறப்பு ரெயில்

ஹவுரா – சென்னை சென்ட்ரல் இடையே முழுவதும் குளு, குளு வசதி கொண்ட பெட்டிகளுடன் தக்கல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.எண்.02843 என்ற சிறப்பு ரெயில் ஹவுராவில் இருந்து 15–ந்தேதி நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலுக்கு மறுநாள் பகல் 2.50 மணிக்கு வந்து சேருகிறது. இதே போல மறுமார்க்கத்தில் சென்ட்ரலில் இருந்து 16–ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடைகிறது. இந்த ரெயிலில் இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி 3 மற்றும் மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டிகள் 8–ம் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் கராக்பூர், கட்டாக், புவனேஸ்வர், குர்டா ரோடு, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, விஜயவாடா, ஒங்கோல், நெல்லூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். தக்கல் சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த தகவலை தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment