Wednesday, 3 June 2015

ரயில் பெட்டிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் பெறும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை முடிவு

ரயில் பெட்டிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய மின்சக்தி மூலம் பெறும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான, சோதனைகளில் வெற்றிகண்டிருப்பதையடுத்து, சோலார் பேனல்களை அனைத்து ரயில் பெட்டிகளில் படிப்படியாக பொருத்துவதற்கு ரயில்வே துறை திட்டமிட்டிருக்கிறது. இதன்மூலம், டீசல் எரிபொருள் சிக்கனத்தை பெருமளவு பெற முடியும் என்பதோடு, சூற்றுச்சூழல் மாசுபடுதலையும் வெகுவாக குறைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுளளது

சோதனை வெற்றி ஏசி பெட்டி அல்லாத, ரயில் பெட்டி கூரையில் சூரிய மின்தகடுகளை பொருத்தி சோதனைகள் செய்யப்பட்டன. இதில், அந்த பெட்டியில் பொருத்தப்பட்ட சூரிய மின் உற்பத்தி தகடுகள் மூலமாக நாள் ஒன்றுக்கு 17 யூனிட் மின்சாரத்தை பெற முடிகிறது.

பயன்பாடு இந்த சூரிய சக்தி மின்சாரத்தை அந்த ரயில் பெட்டிக்கு தேவையான விளக்குகள், மின் விசிறிகளை இயக்க போதுமானதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிய ஒளி மின்சாரம் கிடைக்காத நாட்களில், மாற்று மின்சக்தியில் விளக்குகள், மின்விசிறிகளை இயக்குவதற்கும் அந்த ரயில் பெட்டிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.

மிச்சம் சூரிய மின்சக்தி ரயில் பெட்டிகள் மூலம் ஓர் ஆண்டுக்கு ஒரு ரயிலில் 90,000 லிட்டர் டீசலை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலுக்கு சீர்கேட்டை ஏற்படுத்தும் கரியமில வாயு வெளியேற்றத்தை ஆண்டுக்கு 239 டன் வரையில் தவிர்க்க முடியும்.

சிறப்பான திட்டம் ஒவ்வொரு ரயில் பெட்டியின் கூரையிலும் 40 சதுர மீட்டர் இடம் உள்ளது. இவற்றில் 24 சதுர மீட்டர் பரப்பில் 12 சூரிய மின் தகடுகளும், மீதமுள்ள இடத்தில் சூரிய ஒளியை மின் ஆற்றலாக மாற்றுவதற்கும், சேமிப்பதற்கும் தேவையான சாதனங்களும் பொருத்தப்பட்டிருக்கும்.

சவால்கள் ஒரு பக்கம் இந்த தகவல்கள் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், மறுபுறத்தில் இந்த சோலார் பேனல்களை பராமரிப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. மழை, பனி, தூசி போன்றவை படிவதால், இந்த சோலார் தகடுகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், சுத்தப்படுத்தும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment