Tuesday, 2 June 2015

தட்கல் டிக்கெட் விரைவாக எடுப்பது எப்படி?

    முதலில் உங்கள் பிரௌசரின் அனைத்து கேஸ் & கூகீஸ்களை அழித்து விடவும். (Internet Explorer உபயோகிப்பதை தவிர்க்கவும்).    உங்கள் பிரௌசரின் இந்திய நேரம் IRCTC சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும் ஏனென்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றும் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். IRCTC சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும்.   http://www.indianrail.gov.in/train_Schedule.html       இங்கு சென்று எதாவது ஒரு ரயில் நம்பரை போடவும். உடனே அந்த ரயில் விவரம் இன்றைய தேதி மற்றும் IRCTC சர்வர் நேரம் மிக துல்லியமாக காட்டும். அதற்கு ஏற்றார் போல் உங்கள் கணினி நேரத்தை செட் செய்து கொள்ளுங்கள்.    நீங்கள் பயர்பாக்ஸ் பிரௌசர் உபயோகித்தால் பின்வரும் டூலை டவுன்லோட் செய்தால் அதுவே டைம் மாற்றிக்கொள்ளும்.     http://userscripts.org/scripts/show/109376

    (இது குரோம் ப்ரௌசரிலும் வேலை செய்யும்)     இரண்டாவது Magic Autofill எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை. அதற்க்கான லின்க்    http://ctrlq.org/irctc/      (இது பயர்பாக்ஸ் & குரோம் இரண்டிலும் வேலை செய்யும்).       இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.


    கடைசியாக தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேரத்தில் இன்னொரு புது சர்வரை IRCTC 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் எனும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வரை வருகிறதா என்று பாருங்கள் வரவில்லைஎன்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும். இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக பிரச்சனை இல்லாமல் செய்ய முடியும். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ்  போன்ற எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும்.

1 comment:

  1. Watch This: youtube - VICTORIA - VICTORIA TV - VICTORIA
    Watch this: youtube - VICTORIA TV - VICTORIA TV youtube to mp3 - VICTORIA TV - VICTORIA TV - VICTORIA TV - VICTORIA TV.

    ReplyDelete